திங்கள், 16 ஜூலை, 2012

ஈசா நபியின் மரணம் - விவாத தொகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்..

அன்புள்ள சகோதரர்களே,

ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்கிற கொள்கை கொண்டுள்ள இறை மறுப்புவாதிகள், தங்கள் வாதத்திற்கு குர் ஆனில் எந்த மறுப்பும் கிடையாது என்று சொல்லி வருகின்றனர்.

குர் ஆனில், ஏராளமான வசனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈசா நபி மரணிக்காதது குறித்தும், மீண்டும் இவ்வுலகில் வருவார்கள் என்பதை குறித்தும் சொல்லப்பட்டிருந்தும் , அவை எல்லாம் தங்கள் இறை மறுப்பு கொள்கைக்கு எதிராக நிற்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக, அவற்றை பல சப்பை கட்டுகள் சொல்லி மறுத்து வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, ஈசா நபி மரணிக்கவில்லை என்பதை தெளிவாக சொல்கிற வசனங்களில் ஒன்றான 4 :159 வசனத்தை குறித்த சர்ச்சை, எனக்கும், அந்த இறை மறுப்பு கூட்டத்தை சார்ந்த நௌஷாத் அலி என்பவருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக நடந்தன.

படிக்கிற மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள ஏதுவாக இந்த விவாதம் இரண்டு பிரிவாக நடந்தன.

4 :159 வசனத்திற்கு நாஷித் (நான்) சொல்கிற மொழியாக்கம் சரியா தவறா? என்பது முதல் விவாதமாகவும் (தலா மூன்று வாய்ப்புகள்)
அந்த வசனத்திற்கு நௌஷாத் அலி சொல்கிற மொழியாக்கம் சரியா தவறா? என்பது இரண்டாம் விவாதமாகவும் (தலா ஆறு வாய்ப்புகள்)
நடந்தன.
(இவை pdf பைல்களாக இங்கே தனி தனியாக இணைக்கப்பட்டுள்ளன.)

உண்மையை கண்டறிய விரும்புபவர்கள் இந்த எழுத்து விவாதத்தை படித்தாலே போதும்! அல்லாஹ் நமது நேர்வழிக்கு போதுமானவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக